வாகன உரிமையாளர்கள் காத்திருப்பு போராட்டம்


வாகன உரிமையாளர்கள் காத்திருப்பு போராட்டம்
x

வாகன உரிமையாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருச்சி

துறையூர்:

துறையூரில் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலகத்தில் மோட்டார் வாகன ஆய்வாளராக பணியாற்றி வந்த சத்தியமூர்த்தி, லஞ்சம் பெற்றது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து அந்த அலுவலகத்தில் புதிய மோட்டார் வாகன ஆய்வாளர் நியமிக்கப்படவில்லை. இதனால் வாகனங்களை பதிவு செய்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. புதிதாக வாகனங்கள் வாங்குபவர்கள், அதற்கான பதிவெண் பெற வாகன ஆய்வாளர் அலுவலகத்திற்கு வந்து சென்ற வண்ணம் உள்ளனர். இந்நிலையில் நேற்று அந்த அலுவலகத்திற்கு வந்த வாகன உரிமையாளர்கள், புதிய வாகனங்களை பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும், புதிதாக மோட்டார் வாகன ஆய்வாளரை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் அலுவலக ஊழியர்கள் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story