வாகனங்கள் ரூ.19¼ லட்சத்துக்கு ஏலம்
மதுவிலக்கு வழக்குகளில் பிடிபட்ட வாகனங்கள் ரூ.19¼ லட்சத்துக்கு ஏலம் போனது.
தர்மபுரி
தர்மபுரி மாவட்டத்தில் மதுவிலக்கு வழக்குகள் தொடர்பாக 62 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 6 கார்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த வாகனங்கள் தர்மபுரி ஆயுதப்படை மைதானத்தில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு இளங்கோவன் தலைமையில் ஏலம் விடப்பட்டன. இந்த ஏலத்தில் ஏராளமான மெக்கானிக்குகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு வாகனங்களை ஏலத்தில் எடுத்தனர்.
இதில் 62 மோட்டார் சைக்கிள்கள் ரூ.6 லட்சத்து 73 ஆயிரத்து 344-க்கும், 6 கார்கள் ரூ.12 லட்சத்து 50 ஆயிரத்து 800-க்கும் என மொத்தம் ரூ.19 லட்சத்து 24 ஆயிரத்து 144-க்கு ஏலம் விடப்பட்டன. இந்த ஏலத்தில் மதுவிலக்கு துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜாசோமசுந்தரம், மதுவிலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் பாரதிமோகன் உள்பட போலீசார் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story