வரிசைகட்டி ஊர்ந்து செல்லும் வாகனங்கள்... திக்குமுக்காடும் சென்னை - திருச்சி நெடுஞ்சாலை


வரிசைகட்டி ஊர்ந்து செல்லும் வாகனங்கள்... திக்குமுக்காடும் சென்னை - திருச்சி நெடுஞ்சாலை
x

தீபாவளி பண்டிகையை கொண்டாட மக்கள் சென்னையில் இருந்து தங்களது சொந்த ஊர்களுக்கு படையெடுத்து வருகின்றனர்.

சென்னை,

தீபாவளி பண்டிகை நாளை மறுநாள் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. பண்டிகையை கொண்டாட சென்னையில் இருந்து தங்களது சொந்த ஊர்களுக்கு மக்கள் படையெடுத்துள்ளனர்.

குறிப்பாக திருச்சி, மதுரை, திருநெல்வேலி மற்றும் பிற தென் மாவட்டங்களை சேர்ந்த மக்கள் அதிக அளவில் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். அரசு மற்றும் தனியார் பேருந்துகள் தவிர, மக்கள் தங்களது சொந்த வாகனங்களான கார் மற்றும் பைக்கிலும் பயணம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், இன்று மாலை 3 மணி முதல் சிங்கபெருமாள் கோவில் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு உள்ளது. மேலும், ஆம்புலன்ஸ் கூட செல்ல முடியாத அளவிற்கு கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. கடும் போக்குவரத்தை சீர்செய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.


Next Story