தேவர் குருபூஜைக்கு செல்லும் வாகனங்களுக்கு அனுமதி சீட்டு பெற வேண்டும்
தேவர் குருபூஜைக்கு செல்லும் வாகனங்களுக்கு அனுமதி சீட்டு பெற வேண்டும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்துள்ளார்.
திருப்பத்தூர்
ராமநாதபுரம் மாவட்டத்தில் வருகிற 30-ந் தேதி நடைபெற உள்ள தேவர் குருபூஜையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் இருந்து கலந்துகொள்ள உள்ள பொதுமக்கள் அந்தந்த உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு அளித்து அதற்குண்டான வாகன அனுமதி சீட்டு பெற்று செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. அனுமதி சீட்டு பெற்று செல்லும் வாகனங்கள் மட்டுமே ராமநாதபுரம் மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்படும்.
இந்த தகவலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story