வேளாங்கண்ணி புனித ஆரோக்கியமாதா பேராலய ஆண்டு திருவிழா நிறைவு


வேளாங்கண்ணி புனித ஆரோக்கியமாதா பேராலய ஆண்டு திருவிழா நிறைவு
x
தினத்தந்தி 9 Sept 2023 12:45 AM IST (Updated: 9 Sept 2023 12:45 AM IST)
t-max-icont-min-icon

வேளாங்கண்ணி புனித ஆரோக்கியமாதா பேராலய ஆண்டு திருவிழா நிறைவடைந்தது. கொடி இறக்க நிகழ்ச்சியில் திரளானோர் பங்கேற்றனர்.

நாகப்பட்டினம்

வேளாங்கண்ணி புனித ஆரோக்கியமாதா பேராலய ஆண்டு திருவிழா நிறைவடைந்தது. கொடி இறக்க நிகழ்ச்சியில் திரளானோர் பங்கேற்றனர்.

வேளாங்கண்ணி பேராலயம்

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கியமாதா பேராலயம் அமைந்துள்ளது. மத நல்லிணக்கத்துக்கு அடையாளமாகவும், சர்வ மதத்தினரும் நம்பிக்கையுடன் வழிபட்டு செல்லும் ஆன்மிக சுற்றுலா தலமாகவும் வேளாங்கண்ணி பேராலயம் திகழ்கிறது. உலக பிரசித்திப்பெற்ற இந்த பேராலயத்தில் ஆரோக்கிய மாதாவின் பிறந்தநாள் விழா ஆண்டுதோறும் 11 நாட்கள் விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.

அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த மாதம் (ஆகஸ்டு) மாதம் 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி வேளாங்கண்ணி பேராலயத்தில் தினசரி சிறப்பு பிரார்த்தனை நிகழ்ச்சிகள் நடந்தன.

பெரிய தேர் பவனி

விழாவின் சிகர நிகழ்ச்சியான பெரிய தேர்பவனி நேற்று முன்தினம் இரவு கோலாகலமாக நடந்தது. நேற்று வேளாங்கண்ணி மாதாவின் பிறந்த நாள் விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது.

அப்போது அங்கு உள்ள விண்மீன் ஆலயத்தில் தஞ்சை மறை மாவட்ட பரிபாலகர் சகாயராஜ் தலைமையில் திருவிழா சிறப்பு கூட்டு திருப்பலி நிறைவேற்றப்பட்டது. இரவு 6 மணி அளவில் பங்குத்தந்தை அற்புதராஜ் தலைமையில் நன்றி அறிவிப்பு ஜெபம் செய்து அன்னையின் கொடி இறக்கப்பட்டது.

நன்றி அறிவிப்பு

பின்னர் பேராலய கீழ்கோவிலில் மாதா மன்றாட்டு, திவ்ய நற்கருணை ஆசீர், நன்றி அறிவிப்பு, தமிழ் திருப்பலி நிறைவேற்றுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. திருவிழா நிறைவு நாள் நிகழ்ச்சியில் பேராலய அதிபர் இருதயராஜ், பொருளாளர் உலகநாதன், உதவி பங்குத்தந்தையர்கள் டேவிட் தனராஜ், ஆண்டோ ஜேசுராஜ், ஆரோக்கிய வின்டோ, பேரூராட்சி தலைவர் டயானா சர்மிளா, துணைத்தலைவர் தாமஸ் ஆல்வா எடிசன், பேரூராட்சி செயல் அலுவலர் பொன்னுசாமி, ஆத்மா குழு உறுப்பினர் மரியசார்லஸ் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


Next Story