வேலாயுதபுரம், லட்சுமிபுரம் கிராமங்களில் புதிய பேவர்பிளாக் சாலை திறப்பு


வேலாயுதபுரம், லட்சுமிபுரம் கிராமங்களில்  புதிய பேவர்பிளாக் சாலை திறப்பு
x
தினத்தந்தி 24 Nov 2022 12:15 AM IST (Updated: 24 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

வேலாயுதபுரம், லட்சுமிபுரம் கிராமங்களில் புதிய பேவர்பிளாக் சாலை திறப்பு விழாநடந்தது.

தூத்துக்குடி

நாலாட்டின்புத்தூர்:

கழுகுமலை அருகே உள்ள வேலாயுதபுரம் கிராமத்தில் கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் மேம்பாட்டு நிதி 2021-2022-ன் கீழ் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் புதிய பேவர் பிளாக் சாலை போடப்பட்டது. இதற்கான திறப்பு விழா நடைபெற்றது. விழாவில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. கலந்து கொண்டு புதிய சாலையை திறந்து வைத்தார். தொடர்ந்து கே.லட்சுமிபுரம் கிராமத்தில் ரூ.6.46 லட்சம் மதிப்பீட்டில் போடப்பட்ட புதிய பேவர் பிளாக் சாலையையும் அவர் திறந்து வைத்து பேசினார். இதில் வேலாயுதபுரம் பஞ்சாயத்து துணை தலைவர் ஜோதிசுப்புராஜ், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் சுப்புராஜ், லட்சுமிபுரம் பஞ்சாயத்து தலைவர் மல்லிகா சண்முகபாண்டியன், மாவட்டஜெயலலிதா பேரவை செயலாளர் செல்வக்குமார், கழுகுமலை அ.தி.மு.க. நகர இளைஞரணி செயலாளரும், ஸ்ரீமுருகன் கூட்டுறவு பண்டகசாலை தலைவருமான கழுகுமலை கருப்பசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story