வெள்ளூர் அம்மன் கோவில் கும்பாபிஷேகம்


வெள்ளூர் அம்மன் கோவில் கும்பாபிஷேகம்
x
தினத்தந்தி 1 July 2023 12:15 AM IST (Updated: 1 July 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

வெள்ளூர் அம்மன் கோவில் கும்பாபிஷேகம்

கடலூர்

விருத்தாசலம்

விருத்தாசலம் தாலுகா கம்மாபுரம் ஒன்றியம் முதனை பஞ்சாயத்துக்குட்பட்ட எம்.வீரட்டிக்குப்பம் கிராமத்தில் உள்ள வெள்ளூர் அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி, மிருத்சசிங்கிரஹணம், அங்குரார்பனம், ரக்ஷாபந்தனம், முதற்கால விசேஷ பூஜைகள், பூர்ணாஹூதி தீபாரதனை, யந்திரம் மற்றும் அஷ்டபந்தன மருந்து சாத்துதல் ஆகிய பூஜைகள் நடைபெற்றது.

தொடர்ந்து நேற்று காலை 6 மணியளவில் கோபூஜை, லட்சுமி பூஜை, நாடி சந்தானம், ஸ்பர்ஸாஹூதி, 2-வது காலபூஜை, பூர்ணாஹூதி, தீபாராதனை நடைபெற்றது. பின்னர் யாகசாலையில் இருந்து புனித நீர் அடங்கிய கலசம் புறப்பட்டு காலை 10 மணிக்கு கோவில் விமான கலசத்துக்கும் அதைத் தொடர்ந்து மூலவர் அம்மனுக்கும் கும்பாபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. பின்னர் காலை 10.30 மணிக்கு மஹா அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. இதில் முதனை மற்றும் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்தனர்.


Next Story