வேலூர்: பாஜக 9 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் - மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பங்கேற்பு


வேலூர்: பாஜக 9 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் - மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பங்கேற்பு
x

பொதுக்கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, சி.டி.ரவி, ஏ.சி. சண்முகம் பங்கேற்றுள்ளனர்.

சென்னை,

தமிழகத்தில் கட்சி நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக நேற்று இரவு விமானம் மூலம் மத்திய அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான அமித்ஷா சென்னை வந்தார். நேற்று இரவு முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

அதனை தொடர்ந்து, இன்று சென்னை கோவிலம்பாக்கத்தில் நடைபெற்ற வரும் 2024-ம் மக்களவை தேர்தல் பிரதமர் வேட்பாளர் குறித்து தென்சென்னை தொகுதி பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் அமித்ஷா பங்கேற்று பேசினார்.

இதனை தொடர்ந்து அமித்ஷா வேலூர் சென்றுள்ளார். அவர் வேலூர், கந்தனேரியில் நடைபெறும் பாஜக 9 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் - மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்றுள்ளார்.

பொதுக்கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, சி.டி.ரவி, ஏ.சி. சண்முகம் உள்ளிட்டோரும் ,வேலூர் மாவட்ட கலெக்டர் மற்றும் முக்கிய பிரமுகர்களும் பங்கேற்றுள்ளனர்.


Next Story