வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை அரவைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும்


வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை அரவைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும்
x

ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலைப்பகுதி கரும்புகளை, வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை அரவைக்கு எடுத்துக்கொள்ள, வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையின் பொதுப் பேரவை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

வேலூர்

ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலைப்பகுதி கரும்புகளை, வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை அரவைக்கு எடுத்துக்கொள்ள, வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையின் பொதுப் பேரவை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அரவைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும்

திருவலம் அருகே உள்ள வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையின் 12-வது பொதுப் பேரவை கூட்டம், ஆலையின் நிர்வாக குழு தலைவர் குப்பத்தாமோட்டூர் ஆனந்தன் தலைமையில் நடைபெற்றது. ஆலையின் மேலாண்மை இயக்குனர் மலர்விழி, நிர்வாகம் மற்றும் தணிக்கை அறிக்கைகளை தாக்கல் செய்து உரையாற்றினார்.

கூட்டத்தில், ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை அரவை மீண்டும் தொடங்கும் வரையும், மறு உத்தரவு வரும் வரையும், அந்தப் பகுதி வட்டார அலுவலகங்களாகிய குடியாத்தம், பள்ளிகொண்டா, கே.வி. குப்பம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டம் அக்ராபாளையம், முள்ளிப்பட்டு பிர்க்கா, சேவூர் வட்டம் பகுதியில் உள்ள அங்கத்தினர்களை வேலூர் ஆலைக்கு இணை உறுப்பினர்களாக சேர்த்து, கரும்பு பதிவு செய்து, ஆலைக்கு எடுத்துக் கொள்வது, என்பது உள்ளிட்ட 30 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

விவசாயிகளுக்கு பரிசு

மேலும் ஆலைக்கு அதிகமாக கரும்பு சப்ளை செய்த விவசாயிகளை பாராட்டி பரிசுகள் வழங்கப்பட்டது. பொதுப்பேரவை கூட்டத்தை முன்னிட்டு ஆலை வளாகத்தில் கரும்பு விவசாயிகள் பயன்படுத்தும் டிராக்டர்கள், உள்ளிட்ட விவசாய கருவிகள் கண்காட்சியாக வைக்கப்பட்டிருந்தது.

கூட்டத்தில் திருப்பத்தூர் கூட்டுறவு சர்க்கரை ஆலைத் தலைவர் ராஜேந்திரன், வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையின் நிர்வாக குழு உறுப்பினர்கள், செல்வராஜ், வெங்கடேசன், சங்கரன், பூங்காவனம், உள்ளிட்ட நிர்வாக குழு உறுப்பினர்கள், கரும்பு விவசாயிகள் சங்கத்தினர், கரும்பு விவசாயிகள், ஆலை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


Next Story