வேலூர் சரக டி.ஐ.ஜி. பொறுப்பேற்பு


வேலூர் சரக டி.ஐ.ஜி. பொறுப்பேற்பு
x

வேலூர் சரக டி.ஐ.ஜி.யாக எம்.எஸ்.முத்துச்சாமி பொறுப்பேற்றார்.

வேலூர்

வேலூர் சரக டி.ஐ.ஜி.யாக பணியாற்றி வந்த ஆனிவிஜயா இடமாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து வேலூர் சரக டி.ஐ.ஜி.யாக காஞ்சீபுரம் டி.ஐ.ஜி. சத்யபிரியா கூடுதல் பொறுப்பு வகித்து வந்தார். இந்த நிலையில் வேலூர் சரக டி.ஐ.ஜி.யாக கோவை சரக டி.ஐ.ஜி.யாக பணியாற்றி வந்த எம்.எஸ்.முத்துச்சாமி நியமிக்கப்பட்டார். அவர் நேற்று வேலூர் சரக டி.ஐ.ஜி.யாக பொறுப்பேற்றுக்கொண்டார். அவருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் மற்றும் போலீசார் வாழ்த்து தெரிவித்தனர். இதையடுத்து அவர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு சென்று கட்டுப்பாட்டு அறையை பார்வையிட்டார். அப்போது கண்காணிப்பு கேமராக்களின் செயல்பாடுகள் குறித்து போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் எடுத்துக்கூறினார்.


Next Story