வேலூர்: பீஞ்சமந்தையில் ரூ.5 கோடி மதிப்பில் அமைக்கப்பட்ட சாலை இன்று திறப்பு..!
வேலூர் பீஞ்சமந்தையில் ரூ.5 கோடி மதிப்பில் அமைக்கப்பட்ட சாலை இன்று திறக்கப்படுகிறது.
வேலூர்,
வேலூர் மாவட்டம் ஒடுகத்தூரை அடுத்த பீஞ்சமந்தை மலை கிராம மக்கள் சாலை வசதியின்றி பல ஆண்டு காலமாக பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர். சாலை வசதி என்பது அவர்களுக்கு வெறும் கனவாகவே இருந்து வந்தது.
இதுபற்றி நந்தகுமார் எம்.எல்.ஏ. சட்டமன்றத்தில் பல முறை பேசியதன் எதிரொலியாக ரூ.5.50 கோடி நிதி ஒதுக்கப்பட்டு முத்துக்குமரன் மலையில் இருந்து பீஞ்சமந்தை வரை சுமார் 6.5 கி.மீ தொலைவு புதிய தார் சாலை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பீஞ்சமந்தை சாலை தொடக்க விழாவும் மலைவாழ் மக்களுக்கு பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவும் இன்று (திங்கட்கிழமை) நடக்கிறது. இந்த விழாவில் 4 அமைச்சர்கள் கலந்து கொள்ள உள்ளனர். மலை கிராம மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை தமிழ்நாடு அரசு நிறைவேற்றியுள்ளதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Related Tags :
Next Story