வள்ளி, தெய்வானையுடன் வேல்முருகன் வீதியுலா


வள்ளி, தெய்வானையுடன் வேல்முருகன் வீதியுலா
x

உடையார்பாளையத்தில் வள்ளி, தெய்வானையுடன் வேல்முருகன் வீதியுலா வந்தனர்.

அரியலூர்

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அய்யாசாமி பிள்ளை தெருவில் வள்ளி, தெய்வானை சமேத வேல்முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமி அன்று இரவு வள்ளி-தெய்வானையுடன் வேல்முருகன் வீதியுலா வருவது வழக்கம். அதன்படி நேற்று முன்தினம் மாலை வள்ளி, தெய்வானையுடன் வேல்முருகனுக்கு பால், தயிர், இளநீர், தேன், பன்னீர் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்கள் நடந்தது. பின்னர் வண்ணமலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு, வஸ்திரம் சாத்தப்பட்டு பக்தர்களுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதன் பிறகு வள்ளி தெய்வானையுடன் வேல்முருகன் இரவு 8 மணியளவில் முக்கிய வீதிகளில் வீதியுலா வந்தார். அப்போது வீதிகளின் இருபுறங்களிலும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.


Next Story