ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தினர் வேள்வி பூஜை
கோவில்பட்டி அருகே ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தினர் வேள்வி பூஜை நடத்தினர்.
கோவில்பட்டி:
கோவில்பட்டி அருகே உள்ள பிள்ளையார்நத்தம் கிராமத்தில் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் சார்பில் பங்காரு அடிகளார் அவதார தினம் மற்றும் மழை வேண்டியும், விவசாயம் செழிக்கவும், தொழில் பெருகவும், உலக நலனுக்காக கலச விளக்கு வேள்வி பூஜை நடத்தப்பட்டது. நிகழ்ச்சியில் பரமக்குடி உதவி கலெக்டர் பத்மப்பிரியா கலந்து கொண்டு ஆன்மீக கொடியேற்றி வைத்தார். மாவட்ட தலைவர் முருகன் தீபம் ஏற்றி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து ஏராளமான பெண்கள் கலச வேள்வி பூஜை நடத்தினார்கள். மதுரை பேராசிரியர் இந்திரா காந்தி பக்தி சொற்பொழிவு நடத்தினார். மகளிர் அணி தலைவி பத்மாவதி இலவச வேட்டி- சேலைகள் வழங்கினார். அன்னதான நிகழ்ச்சியை கோவில்பட்டி மன்ற தலைவர் அப்பாசாமி தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பிள்ளையார் நத்தம் மன்ற தலைவர் ராமலட்சுமி, மாவட்ட துணைத் தலைவர் பண்டார முருகன், பொருளாளர் கண்ணாயிரம், வேள்விக்குழு செயலாளர் கிருஷ்ண நீலா, பிரச்சார செயலாளர் முத்தையா உள்பட பலர் கலந்து கொண்டனர்.