எட்டயபுரத்தில் மழை வேண்டி வேள்வி பூஜை
எட்டயபுரத்தில் மழை வேண்டி வேள்வி பூஜை நடைபெற்றது.
எட்டயபுரம்:
கான்சாபுரம் ஆதிபராசக்தி மன்றத்தில் விவசாயம் செழிக்க வேண்டி கலசவிளக்கு வேள்வி பூஜை, சக்தி பூஜையுடன் தொடங்கியது. ஓம் சக்தி கொடியை ஆறுமுககனி ஏற்றிவைத்தார்.
மழைவளம், விவசாயம், தொழில்வளம், மக்கள் நலமுடன் வாழவும் வேண்டி கலச விளக்கு வேள்வி பூஜையை ஆன்மிக இயக்க மாவட்ட தலைவர் சக்தி முருகன் தொடங்கி வைத்தார். இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு 108, 1008 தமிழ் மந்திரங்கள் கூறி குங்கும அர்ச்சனை செய்து வழிபட்டனர். தொடர்ந்து உலக சமாதானத்தை வலியுறுத்தி நடைபெற்ற கஞ்சி கலய ஊர்வலத்தை வேள்விக்குழு பொறுப்பாளர் வரதராஜன் தொடங்கி வைத்தார். தொடர்ந்து ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை மன்ற தலைவர் கனகா முன்னிலையில், எட்டயபுரம் பேரூராட்சி மன்ற தலைவர் ராமலட்சுமி சங்கரநாராயணன் வழங்கினார். அன்னதானத்தை எட்டயபுரம் சப்-இன்ஸ்பெக்டர் முத்து விஜயன் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் ஆன்மிக இயக்க பொருளாளர் கண்ணன், பிரச்சார செயலாளர் முத்தையா உள்பட பலர் கலந்துகொண்டனர்.