விவசாயம் வளம்பெற வேண்டி வேள்வி பூஜை
விவசாயம் வளம்பெற வேண்டி வேள்வி பூஜை நடைபெற்றது.
எட்டயபுரம்:
விளாத்திகுளம் அருகே உள்ள நாகலாபுரம் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றத்தில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடம் ஆன்மிககுரு பங்காரு அடிகளார் 83-வது அவதார விழா நடந்தது. இதையொட்டி மழைவளம் வேண்டியும், தொழில்வளம் சிறக்கவும், விவசாயம் வளம்பெறவும், மக்கள் நலமுடன் வாழவும் கலச விளக்கு வேள்வி பூஜை நடைபெற்றது. குருபூஜை, விநாயகர் பூஜையுடன் தொடங்கியது. ஆன்மிக இயக்க மாவட்ட தலைவர் சக்தி முருகன் தீபம் ஏற்றி தொடங்கி வைத்தார். அடிகளார் வளர்க்கும் ஆன்மிகத்தில் பெண்களுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் என்ற தலைப்பில் பிரசார குழு செயலாளர் முத்தையா ஆன்மிக சொற்பொழிவாற்றினார். ஏழை- எளிய மக்களுக்கு இலவச வேட்டி சேலைகளை மாவட்ட வேள்விக்குழு தலைவர் கிருஷ்ண நீலா வழங்கினார். அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை திரு.வி.க. சக்திபீடம் பத்மா தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில், வட்ட தலைவர் செல்வம், மன்ற தலைவி விஜயலெட்சுமி, இளைஞர் அணி பொறுப்பாளர் ராஜதுரை, எல்.வி.புரம் மன்ற தலைவர் உமாமகேஷ்வரி, வேப்பலோடை அழகுமாரி, தாப்பாத்தி மன்ற தலைவர் சுகந்தினி உள்பட பலர் கலந்து கொண்டனர்.