வேம்படி சுடலைமாட சுவாமி கோவில் கொடை விழா


வேம்படி சுடலைமாட சுவாமி கோவில் கொடை விழா
x

“உடன்குடி சோமநாதபுரம் வேம்படி சுடலைமாட சுவாமி கோவில் ஆடி கொடை விழா நடந்தது.

தூத்துக்குடி

உடன்குடி:

உடன்குடி சோமநாதபுரம் வேம்படி சுடலைமாட சுவாமி கோவில் ஆடி கொடை விழா நடந்தது. முதல் நாள் காலை 8 மணிக்கு மகாகணபதி ஹோமத்துடன் யாகசாலைபூஜை, காலை 9 மணிக்கு கும்பம் ஏற்றி தீபாராதனை, நண்பகல் ஒரு மணிக்கு அலங்கார உச்சிக்கால பூஜை நடந்தது. இரவு 10 மணிக்கு மகுட இசைகனியான் கூத்து, நள்ளிரவில் சிறப்பு அலங்கார சாமக் கொடை பூஜை மற்றும் சிறப்பு படையல் வழிபாடு நடந்தது. 2-ம்நாள் காலை 8 மணிக்கு அசைவ உணவு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


Next Story