வெம்பாக்கம் தாலுகா அலுவலகத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் முற்றுகை
வெம்பாக்கம் தாலுகா அலுவலகத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் ஒன்றியம் சுமங்கலி கிராமத்தில் உள்ள பழங்குடியினர் மக்களுக்கு பட்டா கேட்டு 8 ஆண்டுகளாக மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்காத வருவாய்த்துறையினரை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் மக்கள் மன்றத்தினர் வெம்பாக்கம் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் தூசி போலீஸ் இன்ஸ்பெக்டர் குமார், வெம்பாக்கம் தாசில்தார் சத்யன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதைத் தொடர்ந்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
போராட்டத்தில் மாவட்ட செயலாளர்கள் குப்பன் என்கிற வெற்றிவளவன், மேத்தா ரமேஷ், ஒன்றிய செயலாளர் அம்பேத்கர், சாண்டியன், வெங்கடேசன், நாகவளவன், காளிமுத்து உள்ளிட்ட கட்சியினர் பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story