வெண்டிங் கமிட்டி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும்- சாலையோர வியாபாரிகள் வலியுறுத்தல்
வெண்டிங் கமிட்டி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும்- சாலையோர வியாபாரிகள் வலியுறுத்தல்
ஊட்டி
தமிழ்நாடு சாலையோர வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. இதற்கு சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் சங்கரலிங்கம், செயலாளர் வினோத் தலைமை தாங்கினர். இதன் பின்னர் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்த பின்னர் வியாபாரிகள் கூறியதாவது:- 'சாலையோர வியாபாரிகளை விடுபடாமல் கணக்கெடுப்பு நடத்தி அடையாள அட்டை வழங்க வேண்டும், வெண்டிங் கமிட்டி, சாலையோர வியாபாரிகள் சங்கத்தின் ஆலோசனையை பெற்று கணக்கெடுப்பு நடத்த வேண்டும். வெண்டிங் கமிட்டி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும். சாலையோர வியாபாரிகள் பாதுகாப்புச் சட்டம்-2014 குறித்து அரசு அதிகாரிகள், போலீசாருக்கு முறையான பயிற்சி அளிக்க வேண்டும். சாலையோர வியாபாரிகளுக்கு வழங்கப்படும் இலவச தள்ளு வண்டிகளை வெண்டிங் கமிட்டி, சாலையோர வியாபாரிகள் சங்கத்துடன் ஆலோசித்து முறைகேடு இல்லாமல் வழங்க வேண்டும். கந்துவட்டி கொடுமையிலிருந்து சாலையோர வியாபாரிகள் விடுபட கூட்டுறவு வங்கி மூலம் ரூ.15,000 வழங்க வேண்டும்.
சாலையோர வியாபாரிகள் பாதுகாப்பு சட்டத்துக்கு விரோதமாக சாலையோர வியாபாரிகளை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தும் போக்கை கைவிட வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.