வேங்கைவயல் வழக்கு விசாரணை ஜனவரி 6-ம் தேதிக்கு ஒத்திவைப்பு


வேங்கைவயல் வழக்கு விசாரணை ஜனவரி 6-ம் தேதிக்கு ஒத்திவைப்பு
x
தினத்தந்தி 21 Dec 2023 7:17 PM IST (Updated: 21 Dec 2023 9:10 PM IST)
t-max-icont-min-icon

வேங்கைவயல் வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை அருகே உள்ள வேங்கைவயலில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் அசுத்தம் கலக்கப்பட்ட சம்பவம் தொடா்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் வேங்கைவயல், இறையூர் பகுதியை சேர்ந்த 10 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த அனுமதி கேட்டு புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் மனு தாக்கல் செய்தனர். இந்த சோதனைக்கு சம்பந்தப்பட்ட 10 பேர் தரப்பில் கோர்ட்டில் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது. மேலும் உண்மை கண்டறியும் சோதனைக்கான வழிகாட்டல் நடைமுறைகளைமனுவாக தாக்கல் செய்யசி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு கோர்ட்டு உத்தரவிட்டது.

இந்த நிலையில், இந்த மனு மீதான விசாரணை நீதிபதி ஜெயந்தி முன்னிலையில் கடந்த 8-ம் தேதி வந்தது. அப்போது சி.பி.சி.ஐ.டி. போலீசார் தரப்பில் ஆஜரான அரசு வக்கீல் குமார், உண்மை கண்டறியும் சோதனையை நடத்துவது எப்படி? என்பது குறித்து நீதிபதியிடம் கூறினார். இந்த சோதனையில் மன ரீதியாகவோ, உடல் ரீதியாகவோ எந்த துன்புறுத்தலும் இருக்காது என்றார்.

மேலும் வழக்கின் புலன்விசாரணை அதிகாரிக்கு உடல் நலம் சரியில்லாததால் அவர் மருத்துவ விடுப்பில் இருப்பதாகவும், அதனால் அவர் கோர்ட்டுக்கு வரவில்லை எனவும் கூறினார். இதையடுத்து வழக்கின் விசாரணையை 21-ந் தேதிக்கு (அதாவது இன்று) நீதிபதி ஒத்திவைத்தார்.

அதன்படி, இந்த மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிசிஐடி காவல்துறையின் விசாரணை அதிகாரி தொடர்ந்து விடுப்பில் உள்ளதால் அவகாசம் கோரப்பட்டது. இதையடுத்து மனு மீதான விசாரணையை

வரும் ஜனவரி 6-ம் தேதிக்கு நீதிபதி ஜெயந்தி ஒத்திவைத்து உத்தவிட்டார்.


Next Story