வெங்கடாசலபதி கோவில் தேரோட்டம்


வெங்கடாசலபதி கோவில் தேரோட்டம்
x
தினத்தந்தி 4 July 2023 12:30 AM IST (Updated: 4 July 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

சாத்தூர் வெங்கடாசலபதி கோவிலில் நடைபெற்று வரும் ஆனி பிரம்மோற்சவ திருவிழாவையொட்டி நேற்று தேரோட்டம் நடைபெற்றது.

விருதுநகர்

சிவகாசி

சாத்தூர் வெங்கடாசலபதி கோவிலில் நடைபெற்று வரும் ஆனி பிரம்மோற்சவ திருவிழாவையொட்டி நேற்று தேரோட்டம் நடைபெற்றது.

பிரம்மோற்சவ விழா

சாத்தூரில் மிகப்பழமை வாய்ந்த சாத்தூரப்பன் என்ற வெங்கடாசலபதி கோவிலின் ஆனி பிரம்மோற்சவ திருவிழா கடந்த ஜூன் மாதம் 25-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவையொட்டி சுவாமி தினமும் அன்ன, ஷேச, கருட மற்றும் பல்லக்கு உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வீதியுலா வந்து அருள்பாலித்தார். விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது.

தேரோட்டம்

முன்னதாக ஸ்ரீதேவி, பூதேவியுடன் வெங்கடாசலபதி சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளினார். தேரோட்டத்தை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார். இதில் நகரசபை தலைவர் குருசாமி, யூனியன் தலைவர் நிர்மலா கடற்கரைராஜ் மற்றும் நகராட்சி ஆணையாளர் இளவரசன், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் ஊரின் முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள், பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

விழாவில் இன்று (செவ்வாய்க்கிழமை) வெற்றிவேர் சப்பரத்தில் சுவாமி வீதியுலா நடைபெறுகிறது. நாளை (புதன்கிழமை) சப்பரத்தில் சுவாமி புறப்பாடு நடைபெறுகின்றது. 6-ம் தேதி (வியாழக்கிழமை) உற்சவ சாந்தியுடன் விழா நிறைவு பெறுகின்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.


Next Story