வெங்கடாஜலபதி கோவிலில் வெண்ணைய்த்தாழி உற்சவம்


வெங்கடாஜலபதி கோவிலில் வெண்ணைய்த்தாழி உற்சவம்
x

சேரன்குளம் வெங்கடாஜலபதி கோவிலில் வெண்ணைய்த்தாழி உற்சவம் நடந்தது.

திருவாரூர்

வடுவூர்:

மன்னார்குடி அருகே உள்ள சேரன்குளத்தில் வெங்கடாஜலபதி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் புரட்டாசி மாதத்தில் பிரம்மோற்சவ விழா 10 நாட்கள் நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு விழா கடந்த மாதம் 8-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வந்தது.விழா நாட்களில் தினமும் பெருமாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான வெண்ணைத்தாழி உற்சவம் நடந்தது. இதை முன்னிட்டு கோவிலில் இருந்து உற்சவர் சீனிவாச பெருமாள் வெள்ளி குடத்தை ஏந்தியபடி தவழும் கண்ணன் திருக்கோலத்தில் எழுந்தருளி பல்லக்கில் வீதி உலா செல்லும் நிகழ்ச்சி நடந்தது. அப்போது திரளான பக்தர்கள் பெருமாளுக்கு வெண்ணைய் வழங்கி சாமி தரிசனம் செய்தனர். தீர்த்தவாரி நிகழ்ச்சியுடன் விழா நிறைவு பெற்றது.


Next Story