வேணுகோபாலசாமி கோவில் குடமுழுக்கு


வேணுகோபாலசாமி கோவில் குடமுழுக்கு
x

வேணுகோபாலசாமி கோவில் குடமுழுக்கு

தஞ்சாவூர்

அம்மாப்பேட்டை கிருஷ்ணன் கோவில் தெருவில் வேணுகோபாலசாமி, விஷ்ணு துர்க்கை அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் குடமுழுக்கு விழாவையொட்டி கடந்த 4-ந்தேதி வாஸ்து சாந்தி, முதல் கால யாகசாலை மற்றும் இரண்டாம் கால, மூன்றாம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. நேற்று நான்காம் கால யாகசாலை பூஜை நடைபெற்று, கடங்கள் புறப்பாடு செய்யப்பட்டு மூலவர், உற்சவர் மற்றும் பரிவார தெய்வங்களின் ராஜகோபுர விமான கலசங்களுக்கு பட்டாச்சாரியார்கள் புனித நீர் ஊற்றி குடமுழுக்கு நடத்தினர். தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் ராஜகோபால சாமி வீதி உலா நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை திருப்பணி குழு தலைவர் கே.ராஜாராமன் மற்றும் திருப்பணி குழுவினர் செய்திருந்தனர்.


Related Tags :
Next Story