விழுப்புரத்தில்மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபார்ப்பு பணிகலெக்டர் பழனி ஆய்வு


விழுப்புரத்தில்மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபார்ப்பு பணிகலெக்டர் பழனி ஆய்வு
x
தினத்தந்தி 17 July 2023 12:15 AM IST (Updated: 17 July 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரத்தில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபார்ப்பு பணி யை கலெக்டர் பழனி ஆய்வு செய்தாா்.

விழுப்புரம்


இந்திய தேர்தல் ஆணையத்தினால் விழுப்புரம் மாவட்டத்திற்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் 4,431-ம் (பேலட் யூனிட்), கட்டுப்பாட்டு கருவிகள் 2,855-ம் (கண்ட்ரோல் யூனிட்), யாருக்கு வாக்களித்தோம் என்பதை சரிபார்க்கும் கருவி 3,193-ம் (விவிபேட்) ஆக மொத்தம் 10,479 மின்னணு வாக்கு எந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இந்த மின்னணு வாக்கு எந்திரங்கள் அனைத்தும் விழுப்புரம் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள இந்திய தேர்தல் ஆணைய மின்னணு வாக்குப்பதிவு எந்திர சேமிப்பு கிடங்கில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை இந்திய தேர்தல் ஆணையத்தால் பெல் நிறுவனம் மூலம் விழுப்புரம் மாவட்டத்திற்கென ஒதுக்கீடு செய்யப்பட்ட பொறியாளர்களை கொண்டு முதல்நிலை சரிபார்ப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணியை மாவட்ட கலெக்டர் சி.பழனி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இப்பணியானது வருகிற 10.8.2023 வரை நடைபெறவுள்ளது.


Next Story