குண்டும்,குழியுமான தார்சாலை
குண்டும்,குழியுமான தார்சாலை
குண்டடம்
குண்டடத்தை அடுத்த கோவை -தாராபுரம் மெயின்ரோட்டில் ஒத்தக்கடை அமைந்துள்ளது. ஒத்தக்கடையிலிருந்து இருந்து குங்குமம்பாளையம், கெரடமுத்தூர், ஓலப்பாளையம் வழியாக உடுமலை செல்லம் முக்கியபிரதான சாலையாக செயல்பட்டுவருகிறது இதனால் இந்த சாலையில் அதிகப்படியான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த நிலையில் எல்லக்காடு வாய்க்கால்மேடு அருகே தார்சாலையில் ஜல்லிகள் பெயர்ந்து தார்சாலையில் குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் வாகனத்தில் செல்பவர்கள் தட்டு தடுமாறி செல்கின்றனர். சிலர் கீழே விழுந்து உயிர் தப்பிய சம்பவங்களும் நடைபெற்று வருகிறது. மேலும் இந்த தார்சாலையில் பல இடங்களில் ஜல்லிகள் பெயர்ந்து மிகவும் ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. ஆகவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து இந்த தார் சாலையை சீரமைக்க வேண்டுமென வாகன ஓட்டிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.