ஸ்ரீரங்கம் கோவிலில் இருந்து திருப்பதி வெங்கடாசலபதிக்கு வஸ்திரங்கள்: அமைச்சர் சேகர்பாபு பங்கேற்பு


ஸ்ரீரங்கம் கோவிலில் இருந்து திருப்பதி வெங்கடாசலபதிக்கு வஸ்திரங்கள்: அமைச்சர் சேகர்பாபு பங்கேற்பு
x

ஸ்ரீரங்கம் அரங்கநாத சாமி கோவிலில் இருந்து திருப்பதி வெங்கடாசலபதி கோவிலுக்கு வஸ்திரங்கள் கொண்டுச் செல்லப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.

சென்னை,

ஸ்ரீரங்கம் அரங்கநாதசாமி கோவிலில் இருந்து வஸ்திரங்கள், குடைகள், மலர் வகைகள், பழங்கள் உள்ளிட்ட மங்கள பொருட்கள் ஆந்திர மாநிலம், திருப்பதி வெங்கடாசலபதி கோவிலுக்கு வழங்கப்பட்டது. இதில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பங்கேற்றார்.

முகலாய மன்னர்களின் படையெடுப்பின்போது, அவர்களிடம் நம்பெருமான் விக்ரகங்கள் சிக்காமல் இருப்பதற்காக, திருப்பதி மலையில் வைத்து சுமார் 50 ஆண்டுகள் விக்ரகங்கள் பாதுகாக்கப்பட்டதை நினைவுகூரும் வகையில் இந்த நிகழ்வு நடக்கிறது. ஆண்டுதோறும் ஸ்ரீரங்கம், அரங்கநாத சாமி கோவிலிலிருந்து திருப்பதி வெங்கடாசலபதி கோவிலுக்கு வஸ்திரங்கள் கொண்டுச் செல்லப்பட்டது.

மரியாதை

அதன்படி, அரங்கநாத சாமி கோவிலில் இருந்து கொண்டு வரப்பட்ட வஸ்திரங்கள், குடைகள், மலர் வகைகள், பழங்கள், மஞ்சள், சந்தனம், குங்குமம் உள்ளிட்ட மங்கள பொருட்கள் திருப்பதி, வெங்கடாசலபதி கோவிலுக்கு வழங்கி வஸ்திர மரியாதை செய்யப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச்செயலர் மணிவாசன், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் முரளீதரன், கோவில் இணை ஆணையர் சிவராம்குமார் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story