புதுப்பொலிவுடன் காணப்படும் வெட்டாறு மதகு


புதுப்பொலிவுடன் காணப்படும் வெட்டாறு மதகு
x

புனரமைப்பு பணிகள் நிறைவு பெற்று வெட்டாறு மதகு புதுப்பொலிவுடன் காணப்படுகிறது.

தஞ்சாவூர்

மெலட்டூர்:

புனரமைப்பு பணிகள் நிறைவு பெற்று வெட்டாறு மதகு புதுப்பொலிவுடன் காணப்படுகிறது.

வெட்டாறு மதகு

தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுகா, மெலட்டூர் அருகே உள்ள காவலூர் பகுதியில் வெட்டாறு நீர்த்தேக்க ஷட்டர்கள், மதகுகள் உள்ளன. மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் கல்லணையை அடைந்தது.

கல்லணையில் இருந்து நேற்று காலை காவிரி, வெண்ணாறு, கொள்ளிடம், கல்லணைக்கால்வாய் ஆகியவற்றில் பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது.

புனரமைப்பு

முன்னதாக பொதுப்பணித்துறையினர் ஆறுகளில் உள்ள மதகுகள், தடுப்பணைகள், ஷட்டர்களை புமைப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். நீர்த்தேக்க சட்டர்கள், மதகுகளை புரனமைத்து அவற்றுக்கு வர்ணம் பூசி பணிகள் நிறைவடைந்து புதுபொலிவுடன் காணப்பட்டு வருகிறது. அதன்படி மெலட்டூர் அருகே காவலூரில் வெட்டாற்றில் உள்ள மதகுகளில் புனரமைப்பு பணிகள் நடைபெற்றது.

புதுப்பொலிவுடன் காணப்படுகிறது

இதை தொடர்ந்து புதிய வர்ணங்கள் பூசப்பட்டு புதுபொலிவுடன் மதகுகள் உள்ளன. கல்லணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் இன்னும் ஒரிரு நாட்களுக்கு வந்தடையும் என தெரிகிறது.

மெலட்டூர் பகுதிகளில் உள்ள ஆயிரக்கணக்கான விளைநிலங்கள் வெட்டாறு மூலம் பாசன வசதி பெறுவதால் சம்பா சாகுபடி ஆயத்த பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.


Next Story