சாலையில் இறந்து கிடந்த நாயை அப்புறப்படுத்திய கால்நடை மருத்துவர்
ஜோலார்பேட்டை அருகே சாலையில் 11 நாட்களாக இறந்து கிடந்த நாயை கால்நடை மருத்துவர் அப்புறப்படுத்தினார்.
திருப்பத்தூர்
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர்- வேலூர் தேசிய நெடுஞ்சாலையில் சாலை நகர் அருகே வாகனம் மோதி தெரு நாய் ஒன்று இறந்து கிடந்தது. கடந்த ஒரு வாரமாக அதை அப்புறப்படுத்தாமல் இருந்ததால் அந்தப் பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசியது. ஊராட்சி சார்பில் அந்த நாயை அப்புறத்த நடவடிக்கை எடுக்க வில்லை. இதனால் நேற்று அவ்வழியாக பயணம் செய்த காக்கனாம்பாளையம் கால்நடை மருத்துவர் அன்புசெல்வம் மற்றும் சமூக ஆர்வலர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் இணைந்து சாலையில் இறந்து கிடந்த துர்நாற்றம் வீசிய நாயை அப்புறப்படுத்தி அருகே குழி தோண்டி புதைத்தனர்.
Related Tags :
Next Story