மோட்டார்சைக்கிள் மீது லாரி மோதி கால்நடை மருத்துவமனை டெக்னீசியன் பலி


மோட்டார்சைக்கிள் மீது லாரி மோதி கால்நடை மருத்துவமனை டெக்னீசியன் பலி
x

மோட்டார்சைக்கிள் மீது லாரி மோதி கால்நடை மருத்துவமனை டெக்னீசியன் பலியானார்.

ராணிப்பேட்டை

தக்கோலத்தை அடுத்த அனைக்கட்டாபுதூர் கிராமத்தை சேர்ந்தவர் சரவணன் (வயது 44). இவர் ராணிப்பேட்டையில் உள்ள கால்நடை மருத்துவத்துறையில் லேப் டெக்னீசியனாக வேலை பார்த்து வந்தார். நேற்று மதியம் வேலைக்கு செல்வதற்காக மோட்டார் சைக்கிள்களில் அரக்கோணம் - சோளிங்கர் ரோட்டில் எஸ்.ஆர்.கண்டிகை பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் சரவணன் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்து வந்த தாலுகா போலீசார் உடலை மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.


Next Story