கால்நடை மருத்துவ முகாம்


கால்நடை மருத்துவ முகாம்
x

கொங்கராயநல்லூர் ஊராட்சியில் கால்நடை மருத்துவ முகாம் நடந்தது.

நாகப்பட்டினம்

திருமருகல் ஒன்றியம் கொங்கராயநல்லூர் ஊராட்சி சகடமங்கலம் கிராமத்தில் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் நேற்று நடைபெற்றது. முகாமிற்கு கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குனர் விஜயகுமார் தலைமை தாங்கினார். உதவி இயக்குனர் அசன் இப்ராகிம் முன்னிலை வகித்தார். கால்நடை உதவி மருத்துவர் பிரியதர்ஷினி வரவேற்றார். முகாமில் கால்நடை நோய்களுக்கு எதிரான தடுப்பூசி போடுதல், நோயுற்ற கால்நடைகளுக்கு சிகிச்சை, பசு மற்றும் எருமை இனங்களுக்கு செயற்கை முறை கருவூட்டல், சினைப்பரிசோதனை, மலடு நீக்கம், கன்றுகள்- ஆடுகளுக்கு குடற்புழு நீக்கம், கோழிகளுக்கு வெள்ளைக்கழிச்சல் தடுப்பூசி ஆகியவை போடப்பட்டது. இதில் 350-க்கும் மேற்பட்ட கால்நடைகள் பயன்பெற்றன. முகாமில் சிறந்த கால்நடை உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் உதவி டாக்டா்கள் முத்துகுமரன், ராதா, சிவப்பிரியா, ஸ்ரீதர் மற்றும் கால்நடை ஆய்வாளர்கள், கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள், கால்நடை உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.


Next Story