கால்நடை மருத்துவ முகாம்


கால்நடை மருத்துவ முகாம்
x

ஆழியூர் ஊராட்சியில் கால்நடை மருத்துவ முகாம் நடந்தது.

நாகப்பட்டினம்

சிக்கல்:

நாகை ஒன்றியம் ஆழியூர் ஊராட்சி கடம்பரவாழ்க்கை கிராமத்தில் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமிற்கு கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமை தாங்கினார்.தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன், கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குனர் சஞ்சீவ்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்குனர் அசன் இபுராகிம் வரவேற்றார். முகாமில் 500 கால்நடைகளுக்கு பரிசோதனை, தடுப்பூசி மற்றும் சினை பரிசோதனை, குடற்புழு நீக்கம் ஆகியவை மேற்கொள்ளப்பட்டது. சிறப்பாக கால்நடைகளை பராமரிப்பு செய்த உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. முகாமில் சிக்கல் கால்நடை உதவி டாக்டர் லாரன்ஸ், டாக்டர்கள் பூபதி, ஹரி கிருஷ்ணன், நந்தகுமார், ராதா, கால்நடை ஆய்வாளர்கள் செந்தில்குமார், பாரிவேந்தன், கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் ஆகியோர் கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தனர்.‌ இதில் ஊராட்சி மன்ற தலைவர் மணிமேகலை முருகேசன், துணைத் தலைவர் செய்யது இனாயத்துல்லா, ஊராட்சி செயலாளர் சுந்தரேசன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


Next Story