கால்நடை மருத்துவ முகாம்


கால்நடை மருத்துவ முகாம்
x
தினத்தந்தி 2 Nov 2022 12:15 AM IST (Updated: 2 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

கீழையூர் அருகே புதுப்பள்ளியில் கால்நடை மருத்துவ முகாம் நடந்தது.

நாகப்பட்டினம்

வேளாங்கண்ணி:

கீழையூர் ஒன்றியம் புதுப்பள்ளி ஊராட்சியில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் சிறப்பு கால்நடை மருத்துவம் மற்றும் சுகாதார, விழிப்புணர்வு முகாம் நடந்தது. முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் மலர்கொடி துரைராஜ் தலைமை தாங்கினார்.கால்நடை பராமரிப்பு துறை மண்டல இணை இயக்குனர் சஞ்சீவ்ராஜ், உதவி இயக்குனர்அசன் இப்ராஹிம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் 950 கால்நடைகளுக்கு பரிசோதனை செய்து தடுப்பூசி, சினை பரிசோதனை, குடற்புழு நீக்கம் ஆகியவை மேற்கொள்ளப்பட்டது. சிறந்த கால்நடைகளின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. முகாமில் வேட்டைக்காரனிருப்பு கால்நடை உதவி டாக்டர் சரவணன், கால்நடை ஆய்வாளர் கீதாராமன், கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் பிரபா, தேவேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.


Next Story