கால்நடை மருத்துவ முகாம்


கால்நடை மருத்துவ முகாம்
x

வடக்கு விஜயநாராயணத்தில் கால்நடை மருத்துவ முகாம் நடந்தது

திருநெல்வேலி

இட்டமொழி:

நாங்குநேரி யூனியன் வடக்கு விஜயநாராயணத்தில் தமிழக அரசின் இலவச கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது. வடக்கு விஜயநாராயணம் பஞ்சாயத்து தலைவர் மாணிக்கத்தாய் சங்கர் தொடங்கி வைத்தார். பின்னர் சிறந்த கால்நடை வளர்ப்போருக்கு பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். பரப்பாடி கால்நடை டாக்டர் கணேசன் தலைமையில் மருத்துவ குழுவினர் கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தனர். முகாமில் நோயுற்ற கால்நடைகளுக்கு சிகிச்சை, சினைப்பரிசோதனை, குடற்புழு நீக்கம், மலடு நீக்க சிகிச்சை, தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்றது.


Next Story