கால்நடை மருத்துவ முகாம்
மேலூர் கிராமத்தில் கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது.
அரியலூர்
அரியலூர் மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் ஜெயங்கொண்டம் அருகே மேலூர் கிராமத்தில் சிறப்பு கால்நடை மருத்துவம் மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதில் கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் ஹமீத்அலி, உதவி இயக்குனர்கள் சொக்கலிங்கம், ரிச்சர்ட் ராஜ் ஆகியோர் முன்னிலை வைத்தனர். முகாமில் கால்நடை உதவி மருத்துவர்கள், கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டு, கால்நடைகளுக்கு சினை பரிசோதனை, கன்றுகளுக்கு மற்றும் வெள்ளாடுகளுக்கு குடற்புழு நீக்க மருந்துகள், ஆண்மை நீக்கம் செய்தல், செயற்கை முறை கருவூட்டல், நீண்டநாட்களாக சினை பிடிக்காத பசுக்களுக்கு மலடு நீக்க சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் சுற்றப்பகுதிகளில் இருந்த விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்பவர்கள் தங்களின் கால்நடைகளை கொண்டு வந்துபயன் அடைந்தனர்.
Related Tags :
Next Story