கால்நடை மருத்துவ முகாம்


கால்நடை மருத்துவ முகாம்
x

கால்நடை மருத்துவ முகாம்

திருவாரூர்

எடமேலையூர் ஊராட்சியில் கால்நடை மருத்துவ முகாமை கலெக்டர் சாருஸ்ரீ தொடங்கி வைத்தார்.

கால்நடை மருத்துவ முகாம்

நீடாமங்கலம் வட்டம் எடமேலையூர் ஊராட்சியில் கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் ஆவின் நிறுவனத்தின் சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு கால்நடை மருத்துவ முகாம் நடந்தது.

முகாமை மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ தொடங்கி வைத்து பேசுகையில், கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் ஆவின் நிறுவனம் இணைந்து கலைஞரின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு மாவட்டத்தில் 100 இடங்களில் கால்நடை மருத்துவ முகாம்களை நடத்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தேவையான தடுப்பூசிகள்

திருவாரூர் மாவட்டத்தில் நீடாமங்கலம் வட்டம் எடமேலையூர் ஊராட்சியில் முகாம் நடைபெற்றது. முகாமில் கால்நடைகளுக்கு தேவையான தடுப்பூசிகள், குடற்புழுநீக்க மருந்துகள், செயற்கைமுறை கருவூட்டல், சிறிய அளவிலான அறுவை சிகிச்சைகள், புற ஒட்டுண்ணிகள் நீக்கம் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. கால்நடை நோய்புலனாய்வு பிரிவின் மூலம் கால்நடைகளுக்கான தோல் நோய்கள், ரத்தம், சளி, பால் ஆகியவை ஆய்வு செய்யப்பட்டு நோய் தாக்குதல் மற்றும் தடுப்பு முறைகள் குறித்து கால்நடை வளர்ப்போர்களுக்கு விளக்கப்படுகிறது. ஒவ்வொரு பகுதியிலும் நடைபெறும் முகாம்களை அப்பகுதி மக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.

பரிசுகள்

முகாமில் 1000-க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு பல்வேறு வகையான மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. அதனைத்தொடர்ந்து கிடேரி கன்றுகளுக்கான கருச்சிதைவு நோய் தடுப்பூசியும், சிறப்பு கிடேரி கன்றுகள் வளர்ந்தவர்களுக்கும், அதிகபடியான பால் உற்பத்தி செய்தவர்களுக்கும் கலெக்டர் பரிசுகள் வழங்கினார். இதில் ஆவின் நிறுவன பொது மேலாளர் ராஜசேகரஹரி செட்டி, நீடாமங்கலம் ஒன்றியக்குழு தலைவர் சோம.செந்தமிழ் செல்வன், கால்நடைபராமரிப்புத்துறையின் மண்டல இணை இயக்குனர் ஹமீது அலி, ஊராட்சிமன்ற தலைவர் கோமளாமனோகரன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள், டாக்டர்கள், கால்நடை ஆய்வாளர்கள், கால்நடை வளர்ப்போர்கள் கலந்துகொண்டனர்.


Related Tags :
Next Story