பள்ளப்பட்டி, ஆனைக்குட்டத்தில் கால்நடை மருந்தகங்கள்
பள்ளப்பட்டி, ஆனைக்குட்டத்தில் கால்நடை மருந்தகங்களை அமைச்சர் தங்கம் தென்னரசு திறந்து வைத்தார்.
சிவகாசி
சிவகாசி யூனியனுக்கு உட்பட்ட பள்ளப்பட்டி மற்றும் ஆனைக்குட்டத்தில் விவசாயிகளின் நலனுக்காக ரூ.81 லட்சம் செலவில் கால்நடை மருந்தகங்கள் கட்டப்பட்டன. இதன் திறப்பு விழா நடைபெற்றது. விழாவில் அமைச்சர் தங்கம் தென்னரசு கலந்து கொண்டு மருந்தகங்களை திறந்து வைத்தார். பின்னர் கால்நடைகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து அமைச்சர், கால்நடை டாக்டர்களிடம் கேட்டறிந்தார். பின்னர் அங்கு சிகிச்சைக்கு வந்த கால் நடைகளுக்கு கீரைகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சிகளில் கலெக்டர் ெஜயசீலன், விருதுநகர் எம்.எல்.ஏ. சீனிவாசன், சிவகாசி யூனியன் தலைவர் முத்துலட்சுமி விவேகன்ராஜ், பஞ்சாயத்து தலைவர்கள் ராஜபாண்டியன் (பள்ளப்பட்டி), முத்துராஜ் (ஆனைக்குட்டம்), ஒன்றிய கவுன்சிலர்கள் கலைமணி, அன்பரசு, தனலட்சுமி கண்ணன், கால்நடைத்துறை அதிகாரி கோவில்ராஜா, தி.மு.க. மாநில நிர்வாகி வனராஜா, மாநகர செயலாளர் உதயசூரியன், ஒன்றிய செயலாளர் தங்கராசு, மாநகராட்சி கவுன்சிலர் வெயில்ராஜ், மாணவரணி திலிபன் மஞ்சுநாத், இளைஞரணி ஒன்றிய அமைப்பாளர் உசிலை தங்கராம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.