ரூ.44 லட்சத்தில் கால்நடை மருத்துவமனை


ரூ.44 லட்சத்தில் கால்நடை மருத்துவமனை
x

ரூ.44 லட்சத்தில் கால்நடை மருத்துவமனை கட்டுமான பணியை தேவராஜி எம்.எல்.ஏ. தொடங்கிவைத்தார்.

திருப்பத்தூர்

ஜோலார்பேட்டையை அடுத்த கேத்தாண்டப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் தங்களின் கால்நடைகளை பாதுகாத்துக்கொள்ள கால்நடை மருத்துவமனை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதனையடுத்து ஜோலார்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ. க.தேவராஜி துறை அதிகாரிகள் மூலம் நடவடிக்கை மேற்கொண்டு கேத்தாண்டப்பட்டி ஊராட்சியில் கால்நடை மருத்துவமனை அமைக்க ஜெயசீலன்வட்டத்தில் இடம் தேர்வு செய்யப்பட்டு ரூ.44 லட்சம் மதிப்பீட்டில் கால்நடை மருத்துவமனை கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. செயற்பொறியாளர் சுபஸ்ரீ தலைமை தாங்கினார். உதவி இயக்குனர் முரளி சதானந்தம் வரவேற்றார். மத்திய ஒன்றிய செயலாளர் மற்றும் ஒன்றிய கவுன்சிலர் ேமாகன்ரங்கம், மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் தே.பிரபாகரன், உதவி பொறியாளர்கள் பழனி, நாகராஜன், உதவி செயற்பொறியாளர் தேவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக திருப்பத்தூர் மாவட்ட தி.மு.க. செயலாளர் க.தேவராஜி எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார். அப்போது ஒப்பந்ததாரர் துரைசாமியிடம் கால்நடை மருத்துவமனை கட்டிடத்தை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் எஸ்.ராஜா, ஊராட்சிமன்ற தலைவர் திருப்பதி, ஜெயலட்சுமிசுரேஷ், ஒன்றிய கவுன்சிலர் எழிலரசிகுமார் உள்ளிட்ட ஒன்றிய நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story