கால்நடை சிகிச்சை முகாம்
கோவில்பட்டி அருகே கால்நடை சிகிச்சை முகாம் நடந்தது.
தூத்துக்குடி
கோவில்பட்டி:
கோவில்பட்டி அருகே உள்ள லிங்கம்பட்டி சமத்துவபுரத்தில் கடலையூர் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் கூட்டுறவு வாரவிழாவையொட்டி கால்நடை சிகிச்சை முகாம் நடந்தது. தூத்துக்குடி மாவட்ட ஆவின் துணை தலைவர் பாலமுருகன் தலைமை தாங்கினார். தூத்துக்குடி மாவட்ட பால்வள துணை பதிவாளர் நவராஜ் தொடங்கி வைத்தார். மாவட்ட ஆவின் துணை பொது மேலாளர் பரமசிவம், முதுநிலை ஆய்வாளர்கள் மனோகரன், விக்டர், அதிசயராஜ் ராமமூர்த்தி ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர்.
முகாமில் கால்நடை மருத்துவர்கள் கார்த்திக், கலைச்செல்வி தலைமையில் மருத்துவக் குழுவினர் சிகிச்சை அளித்தனர். முடிவில், கடலையூர் கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்க செயலாளர் அன்பு அரசு நன்றி கூறினார்.
Related Tags :
Next Story