புதுப்பொலிவுடன் காட்சியளிக்கும் வெட்டாறு நீர்த்தேக்கம்


புதுப்பொலிவுடன் காட்சியளிக்கும் வெட்டாறு நீர்த்தேக்கம்
x

வெட்டாறு நீர்த்தேக்கம் புதுப்பொலிவுடன் காட்சியளிக்கிறது

தஞ்சாவூர்

மெலட்டூர்

டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி பணிக்காக கடந்த மாதம் 24-ந் தேதி மேட்டூ்ர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. அந்த தண்ணீர் கல்லணை வந்தடைந்ததும், விவசாய பணிகளுக்கு அமைச்சர்கள் தண்ணீரை திறந்து விட்டனர். அந்த தண்ணீர் காவிரி ஆற்றில் சீறிப் பாய்ந்து ஓடுகிறது. இதனால், உற்சாகம் அடைந்த பொதுமக்கள் ஆங்காங்கே காவிரி தண்ணீரில் மலர் தூவியும், பால் ஊற்றியும் காவிரி தாய்க்கு நன்றி செலுத்தி வருகின்றனர்.

இந்தநிலையில், தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுகா, மெலட்டூர் அருகே காவலூர் பகுதியில் உள்ள வெட்டாறு நீர்த்தேக்க ஷட்டர்கள், மதகுகளை சீரமைப்பு பணிகளில் பொதுப்பணித்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும், வெட்டாற்றில் உள்ள தூண்களில் வர்ணம் தீட்டப்பட்டு புதுப்பொலிவுடன் காட்சி அளிக்கிறது. இன்னும் சில நாட்களில் வெட்டாறு நீர்த்தேக்கத்திற்கு தண்ணீர் வந்தடைந்ததும் இங்கிருந்து விவசாய பணிகளுக்கு தண்ணீர் திறந்து விடப்படும் என்று தெரிகிறது.







Next Story