சாயர்புரம் வழியாக ராமேஸ்வரத்திற்கு பஸ் இயக்க பொதுமக்கள் கோரிக்கை


சாயர்புரம் வழியாக  ராமேஸ்வரத்திற்கு பஸ் இயக்க பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 5 Nov 2022 12:15 AM IST (Updated: 5 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

சாயர்புரம் வழியாக ராமேஸ்வரத்திற்கு பஸ் இயக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தூத்துக்குடி

சாயர்புரம்:

தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் நகரப்பஞ்சாயத்தை சுற்றி பல்வேறு கிராம கிராமங்கள் உள்ளது. இங்குள்ள பொதுமக்கள் புண்ணிய தலமான ராமேஸ்வரத்திற்கு சென்று வருவதற்கு அரசு பஸ் இல்லை. இதனால் இப்பகுதி பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே மாவட்ட நிர்வாகம் பொதுமக்கள் நலன் கருதி உடனடியாக தலையிட்டு ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து சிவகளை, பெருங்குளம், பண்டாரவிளை, நட்டாத்தி, சாயர்புரம், சிவத்தையாபுரம், சேர்வைக்காரன்மடம், கூட்டாம்புளி, புதுக்கோட்டை, தூத்துக்குடி, குளத்தூர், சாயல்குடி, ராமநாதபுரம் வழியாக ராமேஸ்வரத்திற்கு பஸ் இயக்க வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர்.

1 More update

Related Tags :
Next Story