கனகனந்தல் கிராமத்தில் விஜய விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது
கனகனந்தல் கிராமத்தில் நாளை விஜய விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடக்கிறது.
திருக்கோவிலூர்,
திருக்கோவிலூர் அருகே கனகனந்தல் கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற விஜய விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நாளை (வெள்ளிக்கிழமை) காலை நடக்கிறது. இதை முன்னிட்டு இன்று (வியாழக்கிழமை) காலை 9 மணிக்கு மங்கள இசை, மகா கணபதி ஹோமம் மற்றும் விக்னேஸ்வர பூஜையுடன் கும்பாபிஷேக விழா தொடங்குகிறது. தொடர்ந்து வேத பாராயணங்கள் முழங்க யாக வேள்வி பூஜையும், அஷ்டபந்தனம் மருந்து சாத்துதல் நிகழ்ச்சியும் நடக்கிறது. நாளை காலை 6 மணிக்கு விக்னேஸ்வர பூஜையும், 7 மணிக்கு கோபூஜையும், 8 மணிக்கு தீபாரதனையும், 9 மணிக்கு வேதபாராயணமும் 9.30 மணிக்கு கலசம் புறப்பட்டு சென்று காலை 10 மணிக்கு விஜய விநாயகர் கோவில் கோபுர விமானம் மீது புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற இருக்கிறது. அதன்பிறகு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியும், இரவு விஜய விநாயகர் வீதி உலா காட்சியும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், உபயதாரர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் செய்து வருகின்றனர்.