தே.மு.தி.க. நிறுவன தலைவர் விஜயகாந்த் பிறந்தநாளையொட்டி ஏழை மக்களுக்கு அன்னதானம், நலத்திட்ட உதவிகள் மாவட்ட செயலாளர் வெங்கடேசன் வழங்கினார்


தே.மு.தி.க. நிறுவன தலைவர் விஜயகாந்த் பிறந்தநாளையொட்டி    ஏழை மக்களுக்கு அன்னதானம், நலத்திட்ட உதவிகள்    மாவட்ட செயலாளர் வெங்கடேசன் வழங்கினார்
x

தே.மு.தி.க. நிறுவன தலைவர் விஜயகாந்த் பிறந்தநாளையொட்டி ஏழை மக்களுக்கு அன்னதானம், நலத்திட்ட உதவிகளை மாவட்ட செயலாளர் வெங்கடேசன் வழங்கினார்.

விழுப்புரம்


விஜயகாந்த் பிறந்த நாள் விழா

தே.மு.தி.க. நிறுவன தலைவர் விஜயகாந்தின் 70-வது பிறந்த நாள் விழா நேற்று விழுப்புரம் மாவட்ட தே.மு.தி.க. சார்பில் விழுப்புரத்தில் கொண்டாடப்பட்டது.

இவ்விழாவையொட்டி கட்சியின் மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான எல்.வெங்கடேசன் தலைமையில் அவரது வீட்டின் முன்பு கட்சி கொடி ஏற்றப்பட்டது. இதனை தொடர்ந்து அங்கு தே.மு.தி.க. தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.

நலத்திட்ட உதவிகள்

அதன் பின்னர் விழுப்புரம் நகர தே.மு.தி.க. சார்பில் 6-வது வார்டுக்குட்பட்ட கீழ்பெரும்பாக்கம் பகுதியில் வார்டு செயலாளார் அன்பழகன் தலைமையில் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் எல்.வெங்கடேசன் கலந்துகொண்டு கட்சி கொடியேற்றி வைத்து ஏழை மக்கள் 500 பேருக்கு அன்னதானம் மற்றும் வேட்டி-சேலை, இனிப்பு ஆகியவற்றை வழங்கினார்.

இதேபோல் விழுப்புரம் நகரில் 1, 6, 7, 30, 37 ஆகிய வார்டுகளில் நடந்த நிகழ்ச்சிகளில் மாவட்ட செயலாளர் எல்.வெங்கடேசன் கலந்துகொண்டு கட்சி கொடியேற்றி வைத்து ஏழை மக்களுக்கு அன்னதானம், இனிப்பு மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இவ்விழாவில் மாநில விஜயகாந்த் மன்ற துணைச்செயலாளர் ராஜசந்திரசேகரன், விழுப்புரம் நகர செயலாளர் மணிகண்டன், அவைத்தலைவர் சிவா, பொருளாளர் சுபாஷ், மாவட்ட இளைஞர் அணி துணை செயலாளர் சீனிவாசன், மாவட்ட விஜயகாந்த் மன்ற துணைச்செயலாளர் ஆதவன்முத்து, அரசு போக்குவரத்துக்கழக தொழிற்சங்க பொதுச்செயலாளர் ரமேஷ், மண்டல பொருளாளர் செந்தில், நகர துணை செயலாளர்கள் கண்ணன், சீத்தாபதி, மாவட்ட பிரதிநிதி இளையராஜா, நகர இணை செயலாளர் வேம்பு மெய்யப்பன், நகர தொண்டரணி செயலாளர் ஆனந்தன், தகவல் தொடர்பு அணி செயலாளர் கணேசன், மகளிர் அணி செயலாளர் சுமதி, நகர நிர்வாகிகள் செல்வக்குமார், கண்ணபிரான், ரமணா, வெங்கடேசன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story