விக்கிரமங்கலம் பத்ரகாளி அம்மன் கோவில் வைகாசி பொங்கல் திருவிழா


விக்கிரமங்கலம் பத்ரகாளி அம்மன் கோவில் வைகாசி பொங்கல் திருவிழா
x

விக்கிரமங்கலம் பத்ரகாளி அம்மன் கோவில் வைகாசி பொங்கல் திருவிழா நடைபெற்றது

மதுரை

சோழவந்தான்

சோழவந்தான் அருகே செல்லம்பட்டி ஒன்றியம் விக்கிரமங்கலம் கிராமத்தில் இந்து நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட பத்ரகாளிஅம்மன் கோவிலில் வைகாசி பொங்கல் உற்சவ விழா கடந்த 11-ந் தேதி காப்பு கட்டுதல் மற்றும் கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி கோவில்பட்டியில் இருந்து சக்தி கரகம் முளைப்பாரி ஊர்வலத்துடன் எடுத்துவரப்பட்டது. நேற்று காலை கருப்பு சாமிக்கு படையல் வைத்து சிறப்பு பூஜை நடைபெற்றது. இதைத் தொடர்ந்து பத்ரகாளியம்மன் பரிவார தெய்வங்களுக்கும் தீபாராதனை நடந்தது. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவையொட்டி நந்தவனத்தில் இருந்து பால்குடம் அக்னி சட்டி எடுத்து பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். இரவு கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை உறவின்முறை நிர்வாகிகள் தலைவர் ராஜேந்திரன், செயலாளர் சவுந்தரபாண்டியன், துணைத் தலைவர் வையாபுரி, துணைச் செயலாளர் மனோகரன்நாகராஜ், பொருளாளர் ராஜபாண்டியன், மற்றும் விக்கிரமங்கலம் இந்து நாடார் உறவின்முறை பரிபாலன சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர். உற்சவ விழாவில் விக்கிரமங்கலம் எட்டூர் கிராம பொதுமக்கள் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கு விக்கிரமங்கலம் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்தனர்.


Next Story