கிராம நிர்வாக உதவியாளர் தற்கொலை


கிராம நிர்வாக உதவியாளர் தற்கொலை
x
தினத்தந்தி 28 Jan 2023 12:15 AM IST (Updated: 28 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கொளப்பள்ளியில் கிராம நிர்வாக உதவியாளர் தற்கொலை செய்துகொண்டார்.

நீலகிரி

பந்தலூர்,

பந்தலூர் அருகே கொளப்பள்ளி மழவன் சேரம்பாடி பகுதியை சேர்ந்தவர் குபேந்திரராஜன் (வயது 38). இவர் எருமாடு கிராம நிர்வாக உதவியாளராக பணிபுரிந்து வந்தார். அவரது மனைவி செல்வராணி. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். கொளப்பள்ளியில் குடும்பத்தினருடன் தங்கி இருந்தார். இதற்கிடையே அவர் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்ததாக தெரிகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் குபேந்திரராஜன் குடும்பத்தினர் ஒரு அறையில் உறங்கினர். நேற்று காலையில் வெகு நேரமாகியும் குபேந்திரராஜன் எழுந்திருக்க வில்லை. இதனால் அவரது மனைவி சென்று பார்த்த போது, கணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. தகவல் அறிந்த சேரம்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் அமுதா, சப்-இன்ஸ்பெக்டர் சிக்கந்தர் மற்றும் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பந்தலூர் தாசில்தார் நடேசன் வீட்டிற்கு நேரில் சென்று குபேந்திரராஜன் மனைவிக்கு ஆறுதல் கூறி, முதல் கட்டமாக நிவாரண தொகை ரூ.25 ஆயிரம் வழங்கினார். இதுகுறித்து சேரம்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story