கிராம நிர்வாக அலுவலர் சங்க மாநில உயர்மட்ட செயற்குழு கூட்டம்


கிராம நிர்வாக அலுவலர் சங்க மாநில உயர்மட்ட செயற்குழு கூட்டம்
x

கிராம நிர்வாக அலுவலர் சங்க மாநில உயர்மட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

அரியலூர்

ஆண்டிமடம்:

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடத்தில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தின் மாநில உயர்மட்ட செயற்குழு கூட்டம், மாநில தலைவர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது. அரியலூர் மாவட்ட தலைவர் மணிவண்ணன், துணை செயலாளர் குருநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் சுரேஷ் கோரிக்கைகளை விளக்கி பேசினார். மாநில பொதுச் செயலாளர் முத்துச்செல்வன், பொருளாளர் நல்லாகவுண்டன், துணைத் தலைவர் விஸ்வநாதன், செயலாளர் அரங்கவீரபாண்டியன் மற்றும் செயலாளர்கள், பல்வேறு மாவட்ட பொறுப்பாளர்கள் பேசினர். கூட்டத்தில், கிராம நிர்வாக அலுவலர்களை பணியிட மாற்றம் செய்வது, இணைய படி, பயணப்படி கோருதல், 2023-ம் ஆண்டிற்கான நாட்குறிப்பு, நாட்காட்டி போன்றவை விவாத பொருட்களாக எடுத்துக்கொண்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முடிவில் கோட்டச் செயலாளர் வேல்முருகன் நன்றி கூறினார்.


Next Story