கிராம நிர்வாக அலுவலர்கள் ஆலோசனை கூட்டம்


கிராம நிர்வாக அலுவலர்கள் ஆலோசனை கூட்டம்
x

தண்டராம்பட்டில் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது.

திருவண்ணாமலை

தண்டராம்பட்டு

தண்டராம்பட்டில் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது.

தண்டராம்பட்டு தாலுகா அலுவலக வளாகத்தில், திருவண்ணாமலை கோட்டாட்சியர் வெற்றிவேல் தலைமையில் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கோட்டாட்சியர் பேசும்போது சாதி, வருமானம், இருப்பிடம், வாரிசு உள்ளிட்ட சான்றுகளை தினசரி முடிக்கவேண்டும். முதியோர் உதவித்தொகை தகுதியான நபர்களுக்கு வழங்குவதற்கு பரிந்துரை செய்ய வேண்டும். தகுதியான நபர்களுக்கு குடும்ப அட்டை வழங்க வேண்டும். பொதுமக்களிடம் அரசு அலுவலர்கள் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும். மத்திய அரசு மூலம் வீடு ஒதுக்கப்பட்டு பட்டா இல்லாமல் உள்ள பயனாளிகளுக்கு அரசு இடத்தில் பட்டா வழங்க வேண்டும். பட்டா மாறுதல் 7 நாட்களுக்குள் செய்து முடிக்க வேண்டும் என்றார்.கூட்டத்தில் தாசில்தார் பரிமளா, மண்டல துணை தாசில்தார்கள் செந்தில்குமார், ஜான் பாஷா மற்றும் வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story