கிராம விழிப்புணர்வு கூட்டம்


கிராம விழிப்புணர்வு கூட்டம்
x

ஜவ்வாதுமலை புதூர்நாடு மலையில் கிராம விழிப்புணர்வு கூட்டம் போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் நடந்தது

திருப்பத்தூர்

திருப்பத்தூர் தாலுகா போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட ஜவ்வாதுமலை புதூர் நாடு மலை பகுதியில் உள்ள சேம்பரை கிராமத்தில் கிராம விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் தலைமை தாங்கி பேசுகையில், கிராமத்திற்கு வரும் சந்தேக நபர்கள் பற்றியும், கிராமத்தில் நடைபெறும் குற்றச்செயல்கள் குறித்தும் காவல் துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

சட்ட விரோத செயல்களான சாராயம் காய்ச்சுதல், கடத்துதல் மற்றும் விற்கும் தொழிலில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள் என்றார்.

கூட்டத்தில் திருப்பத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில், இன்ஸ்பெக்டர்கள், சப்- இன்ஸ்பெக்டர்கள், போலீசார் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


Next Story