வங்கியாளர்களுடனான கிராம விழிப்புணர்வு கூட்டம்


வங்கியாளர்களுடனான கிராம விழிப்புணர்வு கூட்டம்
x
தினத்தந்தி 5 Nov 2022 12:15 AM IST (Updated: 5 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

சின்னசேலம் அருகே வங்கியாளர்களுடனான கிராம விழிப்புணர்வு கூட்டம் கலெக்டர், எம்.எல்.ஏ. பங்கேற்பு

கள்ளக்குறிச்சி

சின்னசேலம்

சின்னசேலம் அருகே கடத்தூர் கிராமத்தில் ரிசர்வ் வங்கியின் அறிவுறுத்தலின்படி மாவட்ட முன்னோடி வங்கியான இந்தியன் வங்கி சார்பில், அனைத்து வங்கியாளர்களுடனான கிராம விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. இதற்கு கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் தலைமை தாங்கினார். சங்கராபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் உதயசூரியன் முன்னிலை வகித்தார். இந்தியன் வங்கி உதவி பொது மேலாளர் சுதர்சன் வரவேற்றார். கூட்டத்தின் போது பிரதம மந்திரி பீம சுவேக்ஷ யோஜனா திட்டத்தில் காப்பீடு செய்த வாரிசுதாரர்களுக்கு ரூ.2 லட்சத்துக்கான காசோலை, பிரதம மந்திரி வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலை உறுதியளிக்கும் திட்டத்தின்கீழ் 3 பயனாளிகளுக்கு ரூ.12¾ லட்சம் மதிப்பில் தொழில் கடனுக்கான காசோலையை மாவட்ட கலெக்டரும், எம்.எல்.ஏ.வும் வழங்கினர். முன்னதாக, இந்திய ரிசர்வ் வங்கி நிதியியல் சேர்க்கை மற்றும் மேம்பாட்டுத்துறை அலுவலகம் சார்பில், நீதியியல் விழிப்புணர்வு செய்திகள் என்ற விழிப்புணர்வு கையேட்டை கலெக்டர் வெளியிட அதை எம்.எல்.ஏ. உதயசூரியன் பெற்றுக்கொண்டார்.

கூட்டத்தில், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மணி, சின்னசேலம் ஊராட்சி ஒன்றியக்குழு துணைதலைவர் அன்புமணிமாறன், ஊராட்சி மன்ற தலைவர் பேபி, துணை தலைவர் பழனிசாமி, வேளாண்மை இணை இயக்குனர் வேல்விழி, கால்நடைத்துறை இணை இயக்குனர்(பொறுப்பு)சாந்தி, கள்ளக்குறிச்சி கோட்டாட்சியர் பவித்ரா, மாவட்ட தாட்கோ மேலாளர் மணிமேகலை, முன்னோடி வங்கி மேலாளர் முனீஸ்வரன், நபார்டு வங்கி மாவட்ட வளர்ச்சி மேலாளர் பாலமுருகன், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் சந்திரசேகரன், தாசில்தார் இந்திரா மற்றும் பொதுமக்கள், மகளிர் சுய உதவி குழு பெண்கள், அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.


Next Story