கிராம சபை கூட்டம்


கிராம சபை கூட்டம்
x

வாணாபுரம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடந்தது.

திருவண்ணாமலை

வாணாபுரம்

வாணாபுரம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் மாதேஸ்வரன் தலைமையில் இன்று நடந்தது.

மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயா, ஊராட்சி மன்ற துணைத் தலைவர் ஏழுமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி செயலாளர் வெங்கடேசன் வரவேற்று ஊராட்சியில் வரவு, செலவு கணக்குகளை சமர்ப்பித்தார்.

இதில் கிராமப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்வது, அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது, குடிநீர், மின்விளக்கு உள்ளிட்டவைகளை சீரமைப்பது ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது.

தொடர்ந்து வாணாபுரம் ஊராட்சிக்கு தனியாக துணை சுகாதார நிலையம் அமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

இதில் பள்ளி தலைமை ஆசிரியர், கிராமமக்கள் மகளிர் சுய உதவி குழுக்கள், பொதுப்பணித்துறை அலுவலர்கள் சுகாதாரத்துறை அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story