கிராம சபை கூட்டம்


கிராம சபை கூட்டம்
x

கிராம சபை கூட்டத்தில் எம்.பி.மற்றும் எம்.எல்.ஏ. கலந்து கொண்டனர்.

விருதுநகர்

ராஜபாளையம்,

ராஜபாளையம் அருகே தொழிலாளர் தினத்தை முன்னிட்டு அயன்கொல்லங்கொண்டான் ஊராட்சியில் தனுஷ்குமார் எம்.பி., தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ., தலைமையில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது, கூட்டத்தில் தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. பேசுகையில், எனது நிதியிலிருந்து அயன்கொல்லங்கொண்டான் அரசு உயர்நிலைப்பள்ளியில் சமையல் அறை கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சுவருக்கு ரூ.16 லட்சம் நிதி ஒதுக்கி பணிகள் நடைபெற உள்ளன. ரேஷன் கடை, திருமண மண்டபம் சட்ட மன்ற உறுப்பினர் நிதியிலிருந்து கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

கூட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் ராசாஅருண்மொழி, ஊரக வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வசந்தகுமார், ரவிக்குமார், கவுன்சிலர் பூமாரி மாரிமுத்து, ஊராட்சி மன்ற தலைவர் வெள்ளத்துரை, நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


Next Story