கிராம சபை கூட்டம்


கிராம சபை கூட்டம்
x

வெம்பக்கோட்ைட, திருச்சுழி பகுதிகளில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது.

விருதுநகர்

தாயில்பட்டி,

வெம்பக்கோட்டை ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டங்கள் நடைபெற்றன. வெம்பக்கோட்டை ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் சாத்தூர் கோட்டாட்சியர் அனிதா, ஆணையாளர் செல்வராஜன், ஊராட்சி மன்ற தலைவர் ஆறுமுகத்தாய் ஆகியோர் கலந்து கொண்டனர். தாயில்பட்டி ஊராட்சியில் விஜயலட்சுமி தலைமையிலும், சூரார்பட்டியில் சீனியம்மாள் தலைமையிலும், சுப்பிரமணியபுரத்தில் ராஜமோகன் தலைமையில், செவல்பட்டியில் நாகேஸ்வரி தலைமையிலும், ஏழாயிரம்பண்ணையில் ஊராட்சி மன்ற தலைவர் முருகானந்தம் தலைமையிலும், வெற்றிலையூரணியில் சுந்தரவள்ளி தலைமையிலும், விஜய கரிசல்குளத்தில் அங்காள ஈஸ்வரி தலைமையிலும், மடத்துபட்டியில் ஊராட்சி மன்ற தலைவர் சகுந்தலா தலைமையிலும் கிராம சபை நடைபெற்றது. அதேபோல திருச்சுழி ஊராட்சி ஒன்றியத்தில் ஆலடிபட்டி, உடையானாம்பட்டி, கா.கரிசல்குளம் கிழக்கு, மேற்கு, கீழ்க்குடி, சவ்வாசுபுரம், குச்சம்பட்டி புதூர், நல்லாங்குளம் உள்பட 40 ஊராட்சிகளிலும் ஊராட்சிதலைவர்கள் தலைமையில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது.


Next Story